வரலாற்றில் இன்று

•1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.
•1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார்.
•1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
•1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர்.
•1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.
•1802 – குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர்.
•1830 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் அமெரிக்கப் பழங்குடிகளை அகற்றும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
•1905 – உருசிய-சப்பானியப் போர்: சூசிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசியக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு சப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
•1915 – சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து சூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
•1918 – அசர்பைஜான் சனநாயகக் குடியரசு முதலாவது ஆர்மீனியக் குடியரசு ஆகியன விடுதலையை அறிவித்தன.
•1926 – போர்த்துகலில் வன்முறையை அடக்க அங்கு தேசிய சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
•1937 – போல்க்ஸ்வேகன், செருமானிய தானுந்து நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
•1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் செருமனியிடம் சரணடைந்தது. பெல்ஜியம் சண்டை முடிவுக்கு வந்தது.
•1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே, பிரான்சு, போலந்து, பிரித்தானியப் படைகள் நோர்வேயின் நார்விக் நகரைக் கைப்பற்றின.
•1942 – இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஐட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1,800 பேரைக் கொன்று குவித்தனர்.
•1948 – தென்னாப்பிரிக்காவின் பிரதமராக தானியேல் பிரான்சுவா மலான் தெரிவு செய்யப்பட்டார். இவர் பின்னர் இனவொதுக்கலை அமுல்படுத்தினார்.
•1956 – பிரான்சுடன் இந்தியா கையொப்பமிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.
•1958 – இலங்கை இனக் கலவரம், 1958: கல்கிசையில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர். தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.[1]
•1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.
•1975 – 15 மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.
•1977 – அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர்.
•1987 – மேற்கு செருமனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் என்பவர் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் 1988 ஆகத்து 13 இல் விடுவிக்கப்பட்டார்.
•1991 – எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
•1995 – உருசியாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,989 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர்.
•1998 – பாக்கித்தான் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நிகழ்த்தியது. அமெரிக்கா, சப்பான் மற்றும் சில நாடுகள் பாக்கித்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
•1999 – இத்தாலி, மிலன் நகரில், லியொனார்டோ டா வின்சியின் புகழ் பெற்ற இரவு இராவுணவு என்ற புகழ்பெற்ற ஓவியம் 22 ஆண்டுகள் புனரமைப்பின் பின்னர் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.
•2007 – கொழும்பு இரத்மலானையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 7 இராணுவத்தினர் உட்படப் பலர் காயமடைந்தனர்.[2]
•2008 – 240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
•2010 – பாக்கித்தான், லாகூர் நகரில் இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஆராதனையின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
•2010 – மேற்கு வங்கத்தில், ஞானேசுவரி விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.
•2011 – மால்ட்டாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு ஆதரவாக 53% மக்கள் வாக்களித்தனர்.