கொரோனா நோயாளிகளுக்கு உதவ தொண்டு நிறுவனம்: நடிகை நிதி அகர்வால் புது முயற்சி

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ பட நடிகை நிதி அகர்வால் தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருப்பதோடு கொரோனா நோயாளிகளுக்கு உதவ தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படுக்கை வசதி,ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து தட்டுப்பாடு என மக்கள் திண்டாடி வருகிறார்கள். அரசோடு பல துறையினரும் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு 1 லட்சம் அளித்த நடிகை நிதி அகர்வால் தற்போது கோரோனா நோயாளிகளுக்கு உதவ புதிய ’டிஸ்ட்ரிப்ட் லவ்’ என்ற தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். இந்த தொண்டு நிறுவனத்தின் பக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு என்ன தேவையோ அதனை கோரிக்கையாக வைக்கலாம். இதனை கவனிக்கவே ஒரு குழுவையும் அமைத்துள்ள நிதி அகர்வால்  தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் தொண்டு நிறுவனத்தின் லிங்க்கையும் பகிர்ந்திருக்கிறார்

image

ஜெயம் ரவியின் ‘பூமி’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்த நிதி அகர்வால் தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya