கேரளா: தென்மேற்குப் பருவமழை மே 31ல் தொடங்க வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வழக்கமாக கேரளாவில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இம்முறை மே 31 ஆம் தேதியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், தென்மேற்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமோரின் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Author: sivapriya