கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களில் இன்றுமுதல் இலவச உணவு: உணவுத்துறை அமைச்சர்

கோவையில் உள்ள 15 அம்மா உணவகங்களில் இன்று முதல் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும்வரை இலவச உணவு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அர.சக்கரபாணி வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “கோவையில் செயல்பட்டு வரும் 15 அம்மா உணவகங்களில் இன்று முதல் தொற்று கட்டுப்படுத்தப்படும் காலம் வரை உணவு விலையின்றி வழங்கப்படும். அதற்கான செலவினத் தொகையை தி.மு.க ஏற்றுக்கொள்ளும். இதன்மூலம், ஏழை எளியோர், நடைபாதை வாசிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி பயன்பெறுவர்.

நாளும் நன்றே செய்வோம் என்ற அடிப்படையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சியைப் போலவே, அவரது தலைமையிலான தி.மு.கவும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு இயங்கி வருகிறது. கடுமையான காலத்தை கடந்திட, திமுகவும் மக்களுக்கு துணை நிற்கும்” என தெரிவித்திருக்கிறார்.

Author: sivapriya