புயல் பாதிப்பு – ஒடிசா முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

ஒடிசாவில் புயல் பாதிப்பு நிலைமை குறித்து முதல்வர் நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவருகிறார்.

யாஸ் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் நேரில் சென்று பார்வையிடவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

அதனையொட்டி, ஒடிசாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். அதன்பிறகு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நவீன் பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புயல் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Author: sivapriya