”திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார் அதிமுக முன்னாள் அமைச்சர்” – துணை நடிகை புகார்

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

சசிக்குமாரின் நாடோடிகள் படத்தின் முதல் பாகத்தில் நடித்தவர் சாந்தினி. இவர் சென்னை காவலர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக கூறி ஒரே வீட்டில் 5 ஆண்டுகளாக வசித்து வந்தோம். என்னை கர்ப்பமாக்கி கருகலைப்பு செய்ய வைத்தார்.

image

தற்போது என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுவதோடு அடித்து துண்புறுத்தி என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டுகிறார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

கூலிப்படையை வைத்துக் கொலை செய்வதாக மிரட்டும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் மற்றும் மிரட்டல் விடுத்த குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Author: sivapriya