தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மளிகைப்பொருட்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள்

மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி மாலை அணிவித்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி உதவி செய்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடந்த 24ஆம் தேதி முதல் வருகின்ற 31 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

image

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துக்குப்பை ஊராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, அவர்களது பணியை பாராட்டி அஜித் ரசிகர்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வழங்கினார்.

image

அதேபோல்  ஊராட்சி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான அரிசி, காய்கறி,பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.

Author: sivapriya