“அனைவருக்கும் தடுப்பூசி போடாவிடில், மேலும் பல கொரோனா அலைகள்” – ராகுல் காந்தி எச்சரிக்கை

அனைவருக்கும் தடுப்பூசி போடாவிட்டால் மேலும் பல கொரோனா அலைகளால் இந்தியா பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராகுல்காந்தி, ’’தடுப்பூசியில் இந்தியாதான் உலகின் தலைநகரம். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து போடும் பணியை துரிதப்படுத்துவது சாத்தியமானதுதான். அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி தான் ஒரு தலைவன் என்பதை நிரூபிக்க பிரதமர் மோடிக்கு இதுவே சரியான தருணம்.

தற்போதைய வேகத்தில் தடுப்பூசி பணிகள் தொடர்ந்தால், அது 2024ஆம் ஆண்டு மே மாதம்தான் முடிவடையும். தனது நடவடிக்கைகள் மூலம் இரண்டாவது அலை பரவ பிரதமர் மோடியே காரணமாகிவிட்டார். 50 முதல் 60 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் மூன்றாவது மற்றும் நான்காவது அலைக்கு சாத்தியமில்லை’’ என்று தெரிவித்தார்.

Author: sivapriya