தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் ‘டெம்பிள் ரன்’ போட்டி

'டெம்பிள் ரன்' மொபைல் விளையாட்டின் போட்டி வடிவம் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

2011ஆம் ஆண்டு வெளியான 'டெம்பிள் ரன்' விளையாட்டு மொபைல் பயனர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுவரை 200 கோடிக்கும் அதிகமான முறை இந்த விளையாட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் அமைப்பை அடிப்படையாக வைத்து நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை எதுவும் டெம்பிள் ரன் சுவைத்த வெற்றிக்குப் பக்கத்தில் கூட நெருங்க முடியவில்லை.

Author: sivapriya