ஜான்சன் and ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி

ஒரே டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளது.

பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கரோனா தடுப்பூசியை வேகமாகச் செலுத்தும் பணியை பிரிட்டன் அரசு முன்னெடுத்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டனில் அஸ்ட்ராஜெனகா, பைஸர், மாடர்னா ஆகிய கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுத்த நிலையில், தற்போது ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

Author: sivapriya