அமெரிக்கா : கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளம் பெண்ணிற்கு குலுக்கலில் ரூ.7 கோடி பரிசு

அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக வாரந்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 1 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாக வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி முதல் வாரத்திற்கான குலுக்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 22 வயது இளம் பெண்ணான Abbigail Bugenske தான் அந்த 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற அதிர்ஷ்டசாலி. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய். 

அவர் 1 மில்லியன் பரிசு தொகை வென்றுள்ளதை ஒகையோ மாநில ஆளுநர் மைக் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அப்போது அவர் காரில் பயணித்துக் கொண்டிருந்ததாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

“என்னால் இதை நம்ப முடியவில்லை. சற்றும் எதிர்பாராத ஒன்று. அவ்வபோது செய்திகளில் சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்ததை படித்துள்ளேன். இப்போது நானே அந்த அதிர்ஷ்டசாலி என்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் Abbigail Bugenske. அவர் மெக்கானிக்கல் பொறியாளராக விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு தான் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளார் அவர். 

image

ஒகையோ மாநிலத்தில் அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கு இதே போல தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குழுக்கள் முறையில் பரிசு வழங்கப்பட உள்ளது. 

Author: sivapriya