பள்ளி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி: சிங்கப்பூர் அரசு திட்டம்

பள்ளி மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறும்போது, “நாங்கள் பள்ளி மாணவர்களுக்கும் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த முடிவு செய்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த இருக்கிறோம். வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சிங்கப்பூர் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது செலுத்திவிட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Author: sivapriya