ம.பி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; உரிமையாளர் மற்றும் 5 பணியாளர்கள் கைது!

மத்தியப்பிரதேசத்தில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடத்தி வந்த உரிமையாளர் மற்றும் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். 

மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் மசாஜ் சென்டர் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து குவாலியர் காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தியதில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் மற்றும் 5 பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த பெண்களை மீட்டு, மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Author: sivapriya