கொரோனா: உலகம் முழுவதும் 17 கோடி பேர் பாதிப்பு – இரண்டாம் இடத்தில் இந்தியா

உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவால் 5,02,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 17,01,19,645 பேராக உயர்ந்துள்ளது. 15,19,48,076  கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 11,897 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,37,081 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,46,34,488 பேர் உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 93,375 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளானோர் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் பிரேசில் மூன்றாமிடத்திலும் உள்ளன.

Facebook Comments Box
Author: sivapriya