நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 852 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 29,544 ஆக உயர்வு

நாமக்கல்

852 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 28,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,692 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 852 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,544 ஆக உயர்ந்தது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
5,823 பேருக்கு சிகிச்சை
நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 382 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 221 பேர் பலியாகி உள்ள நிலையில், 23,500 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 5,823 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக 30 ஆயிரத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Author: sivapriya