கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேருங்கள் – ஓ.பன்னீர்செல்வம்

கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

”கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகிவிடும். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya