தடுப்பூசி மாநில அரசுக்கு கிடைக்காமல் தனியாருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது – ப.சிதம்பரம்

‘தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் தனியார் கம்பெனிகளுக்கு எப்படி கிடைக்கிறது’ என கேள்வியெழுப்பியுள்ளார் ப.சிதம்பரம். 

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”மாநில அரசுகளின் தடுப்பூசி டென்டர்களுக்கு உற்பத்தியாளர்கள் கையை விரிக்கிறார்கள். தனியார் கம்பெனிகள் நாங்கள் தடுப்பூசிகளைப் பெற்று எங்கள் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்போகிறோம் என்கிறார்கள். மகிழ்ச்சி, பாராட்டுக்கள்

தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் தனியார் கம்பெனிகளுக்குக் கிடைக்கிறது. அது எப்படி?” என கேள்வியெழுப்பியுள்ளார் ப.சிதம்பரம். 

Author: sivapriya