சிஏஏ அமல்படுத்தும் பணிகளை தொடங்கிய மத்திய அரசு

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதையொட்டி அண்டை நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த சிறுபான்மையினர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணிகளை மத்திய அரசு தற்போது தொடங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த மதத்தினர் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருக்கும் அகதிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya