சிரிய அதிபர் தேர்தலில் வெற்றி: ஆசாத்துக்கு ஹசன் ரவ்ஹானி வாழ்த்து

சிரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பஷார் அல் ஆசாத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கும், சிரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிரிய மக்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Author: sivapriya