12 – 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி: ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

12 – 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்புத் தலைவர் மார்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தடுப்பூசி செலுத்துவதால் 12 -15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே பைஸர் கரோனா தடுப்பூசியை 12 – 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Author: sivapriya