கரோனாவை முடிவுக்கு கொண்டுவர 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர மக்கள் தொகையில் 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புக்கான ஐரோப்பிய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹான்ஸ் க்ளூஜ் கூறும்போது, “ கரோனா தொற்று முடிந்துவிட்டதாக எண்ணி விடாதீர்கள். கரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஐரோப்பாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைவாக உள்ளது.

Author: sivapriya