பட்டுக்கோட்டை: சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்

கொரோனா பரவலையொட்டி சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பட்டுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.

கொரோனாவின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தாலும் நகரங்களுக்கு இணையாக தொடர்ந்து கிராமங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பட்டுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சாலைகளில் கிருமி நாசினி இயந்திரத்தின் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

image

ஏற்கனவே,  விஜய் மக்கள் இயக்கத்தினர் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், முட்டைகள் மற்றும் கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர்கள் உள்ளிட்டவைகள் வழங்கி உதவி செய்தனர். குரங்குகளுக்கு பழங்கள் தண்ணீர் தொட்டி அமைத்தனர். இந்நிலையில், தற்போது கிருமி நாசினியும்  தெளித்து வருவதால் அவர்களது இந்தப் பணிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Author: sivapriya