புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் ஆ.ராசா மனைவி உடல்நிலை கவலைக்கிடம்

திமுக எம்.பி.ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சென்னை ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக புற்றுநோய்க்கு எதிராக போராடிவரும் பரமேஸ்வரிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரியின் உடல்நிலை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார் எனவும் ரேலா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya