நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், கார்த்திக் நரேன் படங்கள்!

கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ உள்ளிட்டப் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளன.

கொரோனா சூழலால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில்சூரரைப் போற்றுபடத்திலிருந்து பல தமிழ் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றனஅந்த வகையில், ’துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘நரகாசூரன்’ படம் பல வருட போராட்டத்திற்குப் பிறகு சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதுimage

அதேபோல, பாராட்டுக்களைக் குவித்த ‘அருவி’ படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தம்மனின் அடுத்தப்படமான ‘வாழ்’ படமும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார் என்பதால், இன்னும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

image

விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் நடித்துள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ படமும் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமையையும் விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.

இந்த மூன்று படங்களின் ஓடிடி குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக அறிக்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Author: sivapriya