பிரேசில் மருத்துவமனையில் தீ: 4 பேர் பலி; பலர் காயம்

பிரேசிலில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.

இதுகுறித்து பிரேசில் உள்ளூர் ஊடகங்கள், “பிரேசிலின் வடகிழக்குப் பகுதியான அரகாஜுவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அம்மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி நான்கு பேர் பலியாகினர். 35க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். மேலும், அம்மருத்துவமனையில் முக்கிய சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

Author: sivapriya