பிரியாணியில் லெக் பீஸ் காணவில்லை என புகார்; இளைஞருக்கு பதிலளித்த தெலங்கானா அமைச்சர்

‘கிணத்தக் காணோம்’னு காவல்துறையிடம் புகார் அளித்த சினிமா காட்சி போன்ற ருசிகர சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

ஆர்டர் செய்து பெற்ற பிரியாணியின் லெக் பீஸ் காணவில்லை என்று ஒருவர் அளித்த புகாருக்கு அந்த மாநில அமைச்சரும், முதல்வரின் மகனுமான ராமராவ் பதிலளித்துள்ளார். ட்விட்டர் மூலம் பதிவிடப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பெயர் பெற்றுள்ளார் ராமராவ். அவரை டேக் செய்து இளைஞர் ஒருவர் வெளியிட்ட பதிவில், சொமேட்டோவில் ஆர்டர் செய்து பெற்ற சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் காணவில்லை என்று கூறியிருந்தார்.

அதற்கு பதில் பதிவிட்டுள்ள அமைச்சர், இதற்கு என்னை ஏன் பிரதர் கோத்து விட்டீங்க? நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். இது தெலங்கானாவில் பேசுபொருளானது.

Author: sivapriya