அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் சேதம்: வேதனையில் கடலூர் விவசாயிகள்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் திடீர் கோடை மழையால் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொளார், புத்தேரி, மருதத்தூர், மேலூர், எரப்பாவூர், ஆதமங்கலம், சாத்தநத்தம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் பாசன நீரைக்கொண்டு நெல் பயிரிட்டனர். நெற்பயிர்கள் நன்றாக விளைந்து சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழையில் பயிர்கள் நீரில் மூழ்கியது.

image

இதனால், நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தற்போது முற்றிலுமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் வாங்கிய கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவது என விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். வேளாண் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Facebook Comments Box
Author: sivapriya