ட்விட்டர் இந்தியா ட்ரெண்டிங்கில் ‘கோ பேக் ஸ்டாலின்’ ஹேஷ்டேக் முதலிடம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி மாநில அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடக்கிறது. தினசரி 30 பேருக்கு மேல் இறப்பு உள்ளது. கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். 
இச்சூழலில், ட்விட்டரில் இந்திய அளவில் #GoBackStalin என்ற ஹேஸ்டேக் முதலிடம் பிடித்துள்ளது. 12 மணி நிலவரப்படி இந்த ஹேஸ்டேகில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் பதிவாகியுள்ளன.

Facebook Comments Box
Author: sivapriya