“எனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி” – ஓபிஎஸ்

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுங்கள் என்ற தனது வேண்டுகோளை ஏற்ற முதல்வருக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை நேற்று வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.


முன்னதாக,  கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூபாய் 5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்தப்படும். அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி – விடுதிச் செலவை அரசே ஏற்கும். பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Facebook Comments Box
Author: sivapriya