பெண்ணை ஏமாற்றியதாக புகார்: நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் கைது

திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலரை போலீஸார் கைது செய்தனர்.

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் பாதுகாவலராக இருப்பவர் குமார் ஹெக்டே. இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் மீது மும்பயைச் சேர்ந்த பெண் ஒருவர் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில் குமார் ஹெக்டே தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட மும்பை காவல் துறையினர் தனிப்படையுடன் கர்நாடக மாநிலத்தில் குமார் ஹெக்டே வசிக்கும் ஹெக்காதஹல்லி கிராமத்துக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த குமார் ஹெக்டேவை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை்காக குமார் ஹெக்டேவை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.

Author: sivapriya