“கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ளவில்லை” -பிரேசில் அதிபருக்கு எதிராக திரண்ட மக்கள்

பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக சொல்லி அந்த நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரியோ டி ஜெனீரோ உட்பட பல்வேறு நகரங்களில் திரண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் அதிபர் பதவி விலக வேண்டுமென்ற கோஷத்தையும் எழுப்பினர். மேலும் சிலர் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை ஒரு இனப்படுகொலையாளார் எனவும் சொல்லி இருந்தனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அரசு தரவுகளின் படி 4.61 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆரம்பத்திலிருந்தே அதிபர் தொற்று பரவலை தடுப்பதில் மெத்தனமாக செயல்பட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

Facebook Comments Box
Author: sivapriya