ஜூலையில் 20 – 25 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டம்

வரும் ஜூலையில் 20 முதல் 25 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல ஆகஸ்ட் மாதத்தில் 30 கோடி தடுப்பூசிகளும் கொள்முதல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் ஜூன் மாதம் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா 10 முதல் 12 கோடி கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஜூன் மாதம் அரசுக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இதுவரை 21,20,66,614 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 4,44,49,137 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர். கடந்த மே-1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya