நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சரை அழைத்து காவல்துறையினர் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். 

திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து அமைச்சர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya