உலக புகையிலை ஒழிப்பு தினம்

புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த புகை பிடிக்கும் பழக்கத்தால் கேன்சர் உள்ளிட்ட உயிரைக்கொள்ளும் நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. உலகின் 2-வது உயிர்கொல்லி என்று புகையிலையை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இதற்காக ஆண்டுதோறும் மே 31-ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். இது குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே கர்பிணிகள் புல்கைப்பதோ அல்லது புகைப்பவரின் அருகில் நிற்பதோ நல்லது அல்ல.