கரோனா வைரஸ் பரவல் குறைந்தது; 11 நாட்டினருக்கான பயண தடையை நீக்கியது சவுதி அரேபியா

கரோனா பரவல் குறைந்து வருவதை யடுத்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 11 நாட்டினருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நேற்று விலக்கிக் கொண்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடப்பாண்டு தொடக்கம் முதலே கரோனா 2-ம் அலை வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியா வருவதற்கு அந்நாடு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதித்தது.

Author: sivapriya