என் பெயர்ல மட்டன் ஷாப்பா? சைவ உணவு விற்க நான் உதவ முடியுமா?- சோனு சூட்

தனது பெயரில் ஆட்டு இறைச்சிக்கடையை திறந்த நபருக்கு, சைவ உணவு சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய நான் உதவ முடியுமா? என்று நடிகர் சோனுசூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனது பெயரில் ஒருவர் ஆட்டு இறைச்சிக்கடையை திறந்து விற்பனை செய்வது தொடர்பான, ஊடக செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட் “ நான் சைவ உணவு உண்பவன். என் பெயரில் ஆட்டு இறைச்சிக்கடையா? சம்பந்தப்பட்டவர் சைவ உணவு பொருட்களை விற்க நான் உதவ முடியுமா?” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

image

கொரோனா 1-வது அலையின்போது பாலிவுட் நடிகர் சோனு சூட் பலருக்கு உதவிக்கரம் நீட்டினார். அதனைத்தொடர்ந்து பலரும் அவரிடம் சமூகவலைதளங்கள் மூலம் உதவி கேட்டு வருகின்றனர். உதவுவதற்காகவே அவர் ஒரு தனி மொபைல் எண்ணையும், மொபைல் ஆப்பையும் உருவாக்கியுள்ளார்.

கொரோனா 2-வது அலையிலும், படுக்கை வசதி மற்றும் வென்டிலேட்டர் கிடைக்காமல், மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நாக்பூரை
சேர்ந்த 25 வயது கைலாஷ் அகர்வால் என்ற பெண்ணை, கொரோனா சிகிச்சைக்காக நாக்பூரிலிருந்து ஹைதராபாத் தனியார்
மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வர உதவினார். தொடர்ந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும்
அவர் உதவி செய்து வருகிறார். ஆபத்துக்காலத்தில் உதவி கரம் நீட்டிய சோனு சூட்டின் பெயரை சிலர் தங்களது குழந்தைகளுக்கும் சூட்டியது
குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya