தோனி குறித்த ரசிகரின் கேள்வி… நெகிழ வைத்த கோலி

தோனி குறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இரண்டே வார்த்தைகளில் பதிலளித்து நெகிழ வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி.

இந்தியா- நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படவுள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது மும்பையில் தனிமை முகாமில் இருக்கிறார்கள்.

image

இந்த தனிமை முகாமில் பல இந்திய வீரர்களும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தும், சமூக வலைத்தளதித்ல புகைப்படங்களை பகிர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் தன் குடும்பம் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது ரசிகர் ஒருவர் கோலியிடம், மகேந்திரசிங் தோனி குறித்து இரண்டே வார்த்தைகளில் பதிலளியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த கோலி, “நம்பிக்கை, மரியாதை” எனக் கூறினார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதன் மூலம் தோனி மீது கோலி கொண்டுள்ள அபிப்ராயம் எத்தகையது என்று ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பேசி வருகின்றனர்.

Facebook Comments Box
Author: sivapriya