லட்சத்தீவு நிர்வாகியை திரும்பப் பெறக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேலை திரும்பப் பெறக்கோரி, கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. இதில், லட்சத்தீவில் கொண்டு வரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சீர்திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக சட்டமன்றன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக கேரளா நிற்பதாகவும், உடனடியாக அங்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த பிரச்னை தொடர்பாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். பினராயி விஜயன் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பின், சட்டசபையில் முதன் முறையாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya