கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல: பிரிட்டன், நார்வே விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என பிரிட்டன் மற்றும் நார்வே விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. சீனாவின் வூகான் ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு நீடிக்கும் சூழலில் உலகெங்கும் அதுதொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில், பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நார்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Author: sivapriya