கரோனாவைக் கையாள்வதில் தோல்வி: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி பிரம்மாண்ட பேரணி

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தினர். இந்தப் பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

ஜெய்ர் போல்சனோரா கரோனா வைரஸ் விவகாரத்தைச் சரியாகக் கையாளவில்லை என்றும், அவரது அரசியல் அணுகுமுறை காரணமாக பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கரோனாவுக்குத் தங்கள் உயிரை பலி கொடுத்துள்ளனர் என்றும் பிரேசில் சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

Author: sivapriya