இதுவரை 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: சீனா

சீனாவில் ஞாயிறு நிலவரப்படி 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை வரை சீனா முழுவதும் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே மாதம் முதல் சராசரியாக ஒரு நாளைக்கு 1.2 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் உலக நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசியை சீனா ஏற்றுமதி செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya