இந்தியாவின் 2020-21 ஜிடிபி வளர்ச்சி மைனஸ் 7.3%, நிதிப்பற்றாக்குறை ரூ.18.21 லட்சம் கோடி

கடந்த நிதி ஆண்டில் (2020-21) இந்தியாவின் வளர்ச்சி எதிர்மறையில் இருக்கிறது. மைனஸ் 7.3 சதவீதம் அளவுக்கு பொருளாதாரம் சரிந்திருக்கிறது. ஆனால், கடந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் மட்டும் 1.6 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது.

2019-2020-ம் நிதி ஆண்டின் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தாக்கம் தொடங்கியாதால் பொருளாதாரத்தில் பெரும் சரிவு இருந்தது.

2020 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 24 சதவீதமாகும். இரண்டாம் காலாண்டில் மைனஸ் 7.5 சதவீத வளர்ச்சி இருந்தது. மூன்றாம் காலாண்டில் சாதகமான வளர்ச்சியை பொருளாதாரம் தொட்டது. மூன்றாம் காலாண்டில் 0.4 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி இருந்தது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியை இந்தியா அடைந்திருக்கிறது.

நிதிப்பற்றாக்குறை: கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை 9.3 சதவீதமாக இருந்தது. தொகை அடிப்படையில் பார்க்கும்போது ரூ.18.21 லட்சம் கோடியாக நிதிப்பற்றாக்குறை இருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் 3.5 சதவீதத்துக்குள் (ரூ.7.96 லட்சம் கோடி) நிதிப்பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அரசின் வருமானம் குறைந்தது மட்டுமல்லாமல் செலவுகளும் அதிகரித்தன. அதனால் நிதிப்பற்றாக்குறை உயர்ந்தது.

2019-20ம் நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 4.6 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya