“எதிர்க்கட்சிகளின் தொகுதிகளுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் பாரபட்சம்“ – ஆர்.பி.உதயகுமார்

எதிர்க்கட்சிகளின் தொகுதிகளுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அணீஸ் சேகரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “தமிழகத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது” என குற்றம் சாட்டினர்.

Facebook Comments Box
Author: sivapriya