உச்ச நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனம்

உச்ச நீதிமன்றத்துக்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களாக அரிஸ்டாட்டில், குமணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுவருபவர்களும், திமுக வழக்குகள் பலவற்றில் நேரில் ஆஜராகியுள்ளவர்களுமான அரிஸ்டாட்டில் மற்றும் குமணன் ஆகியோர் தற்போது தமிழக அரசு தரப்பு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் குற்றம் சார்ந்த வழக்குகளையும், மற்றொருவர் சிவில் வழக்குகளையும் பார்த்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்களாக ஏற்கெனவே இருந்தவர்களான எம்.யோகேஷ் கன்னா, டி.ஆர்.பி. சிவக்குமார், பி.விநோத் கன்னா ஆகியோரின் ராஜினாமாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Facebook Comments Box
Author: sivapriya