முதல் தவணை ரூ.2000ஐ பெறாதவர்கள் ஜூனில் வாங்கலாம் – தமிழக அரசு

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ.2000ஐ வாங்காதவர்கள், ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றவுடன், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் எனவும், அதில் முதல் தவணையாக ரூ.2000 மே மாதத்திலேயே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மே மாதத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கப்பட்டதை 98% பேர் வாங்கியிருக்கும் நிலையில் மீதமுள்ளவர்கள் அதை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya