தமிழகத்தில் 28,000க்கு கீழ் வந்த தினசரி கொரோனா – 478 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27,936 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 2,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் சிகிச்சைப்பலனின்றி 478 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24,232 ஆக உள்ளது.

கொரோனா சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் இணை நோய் இல்லாத 108 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,01,781 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 31,223 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 17,70,503 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 12 வயதிற்குட்பட்ட 897 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

image

கோவையில் 3,488, ஈரோடு 1,742, திருப்பூர் – 1,373, சேலம் 1,157, செங்கல்பட்டு 1,138, திருச்சி 1,119, நாமக்கல் 983, கன்னியாக்குமரி 908, திருவள்ளூர் 865, தஞ்சை 780, நாகை 717, மதுரை 695, கடலூர் 683, விழுப்புரம் 639, காஞ்சிபுரம் 596, தூத்துக்குடி 590 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya