“கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை வழங்குங்கள்“ – பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தமிழகத்தில் குறைந்த அளவே உள்ளது. ஆம்போடெசிரின் மருந்தை தமிழகத்திற்கு அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 

“கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் தமிழகத்தில் தற்போது அதிகளவில் பரவி வரும் சூழலில் லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி IV மருந்து ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு அதிகரித்து  பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சிகிச்சைக்கு உதவிட பிரதமரை வேண்டுகிறேன்.


மேலும் எனது கோரிக்கைகளை ஏற்று தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துகளையும், ஆக்சிஜன் விநியோகத்தையும் அதிகப்படுத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த கடிதத்துடன் ட்வீட் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

Facebook Comments Box
Author: sivapriya