‘சிங்கப்பூரில் விரைவில் குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி’: பிரதமர் லீ அறிவிப்பு

சிங்கப்பூரில், கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடுவதற்கு திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் லீ கூறியிருக்கிறார்.

இதுபற்றி இன்று பேசியிருக்கும் அவர், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவுகள், நாளை முதல் தொடங்குவதாக அறிவுறுத்தியுள்ளார். இவர்களில், ஓ – என் – ஏ லெவெல் படிப்புகளிலிருக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரப்படும் எனக் கூறியுள்ளார். இதன்படி அளிக்கப்பட்டால், 56,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குப் பிறகு, 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

இதுபற்றி அந்நாட்டின் வெளியுரவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் “சமீபத்தில் கொரோனா பாதிப்பு குழந்தைகளுக்குத்தான் அதிகம் பதிவானது. குழந்தைகளை பாதிக்கும் என்பது, அவர்களின் குடும்பத்தையே மனதளவில் பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது. ஆகவே குழந்தைகளை காக்க, அவர்களுக்கு  தடுப்பூசி போடும் முயற்சியை சிங்கப்பூர் அரசு தொடங்கும். முதற்கட்டமாக, பள்ளி குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்” என சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.

image

சிங்கப்பூரில், தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு, அவர்களின் முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதனால், ஆகஸ்ட் இறுதிக்குள் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி விநியோகிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. 40 – 44 வயதினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மட்டுமன்றி 60 வயதுக்கு மேற்பட்டோரில், மூன்றில் ஒருபங்கினருக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இப்போதைக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்றும், விரைவில் அவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்றும் கூறியுள்ளார் அவர். 

இதைத்தொடர்ந்து இன்று பேசியிருக்கும் அந்நாட்டு பிரதமர் லீ, மாணவர்களுக்கான தடுப்பூசி விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் “சிங்கப்பூரில், 40 தடுப்பூசி மையங்கள் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தடுப்பூசிகளும், கொரோனா கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மேற்கொண்டு வேகப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். குழந்தைகளுக்கு தடுப்பூசி கொடுத்த பிறகு, ஜூன் மாத பிற்பகுதியிலிருந்து 39 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும். அவர்கள்தான் சிங்கப்பூரில் அதிகம் என்பதால், அவர்களை இரு வாரங்கள் முன்னுரிமை தர திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு அவை விநியோகிக்கப்படும்.

image

தற்போதுவரை, நாட்டில் 37 சதவிகிதம் பேருக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மூன்றில் இரு பங்கினருக்காவது, ஜூலைக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்” எனக்கூறியுள்ளார் அவர்.

“பள்ளி குழந்தைகளுக்கான தடுப்பூசியில், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க அழைப்பு விடுக்கப்படும்” எனக்கூறியுள்ளார் அவர்.

Facebook Comments Box
Author: sivapriya