நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் ஒரு மணிநேர சோதனைக்கு பின்னர் அது புரளி என தெரியவந்தது.

காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்த அடையாளம் தெரியாத நபர், அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு விரைந்த நீலாங்கரை காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனையிடப்பட்டது. முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்தது. கடந்த ஆண்டும் இதேபோல் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya