ஆன்லைன் ஆர்டர் மூலம் மதுபானங்களை வீட்டுக்கு சென்று வழங்க டெல்லி அரசு அனுமதி

டெல்லியில் மொபைல் ஆப் மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் மதுபானங்களை வீட்டுக்கே சென்று ( home delivery) வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக வீட்டுக்கே சென்று மதுபானங்களை விநியோகிக்க டெல்லியில் மது வர்த்தகத்தை நிர்வகிக்கும் திருத்தப்பட்ட கலால் விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. டெல்லி கலால் (திருத்த) விதிகள், 2021 ன் படி, எல் -13 உரிமம் பெற்றவர்கள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் விடுதிகள்,ஹோட்டல்கள் மற்றும் நிறுவனத்திற்கு மதுபானம் விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களிலும் மதுவிற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya